திருமண பொருத்தம் | Thirumana Porutham |
💑 திருமண பொருத்தம் - Marriage Matching
திருமண பொருத்தம் என்பது ஒரு நம்பிக்கையுடன் கூடிய ஜோதிட முறையாகும். இது மணமக்கள் இருவரது நட்சத்திரம் மற்றும் ராசி அடிப்படையில் திருமண தகுதியை கணிக்க உதவுகிறது.
திருமண பொருத்தங்கள்
தினப் பொருத்தம் :
மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.
கணப்பொருத்தம் :
இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும்... இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.
மகேந்திரப் பொருத்தம் :
பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.
ஸ்திரீ தீர்க்கம் :
மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.
யோனிப் பொருத்தம் :
இது மிக முக்கியமானது... எனவே இது முக்கியம்.
இராசிப் பொருத்தம் :
இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.
இராசி அதிபதி பொருத்தம் :
சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.
வசியப் பொருத்தம் :
மணமக்களின் நேச வாழ்விற்காக.
ரஜ்ஜிப்பொருத்தம் :
இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும்... இது மிக முக்கியம்.
வேதைப் பொருத்தம் :
துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.
நாடிப் பொருத்தம் :
இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
விருட்சப் பொருத்தம் :
ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.