காலி மனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய குறிப்புகள் |
காலி மனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கியக்குறிப்புகள்
- காலி மனையானது நான்கு செங்குத்தான (90°) மூலைகளைக் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும். அதாவது காலி மனையானது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டும் இருக்கவேண்டும்.
- காலி மனையானது சரியான திசைகளை (திசைகாட்டும் கருவியில் 10º பாகைகளுக்கு மிகாமல்) கொண்டதாக இருக்கவேண்டும்.
- காலி மனையானது கட்டாயமாக தவறான தெருக்குத்துகளினால் பாதிக்கப்பட்டு இருக்ககூடாது.
- காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் உயர்ந்த மலைகள், பழைய கோவில் கோபுரங்கள் கொண்டதாகவும், வடக்கிலும், கிழக்கிலும் ஆறு, குளம், ஏரிகள் கொண்டதாகவும் இருப்பது சிறப்பு. இதற்க்கு எதிர்மாறாக இருக்ககூடாது.
- காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் சற்று மேடாகவும் வடக்கிலும், கிழக்கிலும் சற்று பள்ளமாகவும் இருப்பது சிறப்பு.
- காலி மனையானது கட்டாயமாக நல்ல சாலை வசதிகொண்டதாக இருக்கவேண்டும்.
- காலி மனையை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மரங்கள்,முட்செடிகள், கற்கள் ஆகியவைகளை வேருடன் நீக்கி சுத்தம் செய்யவேண்டும். மேலும் காலி மனையை தெற்கிலிருந்து வடக்காகவும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காகவும் சரிவாக இருக்கும்படியும் அமைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.
- காலி மனையினை சுற்றி வேலிகள் அமைத்து, உச்சஸ்தானத்தில் நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளுதல் மிகவும் சிறப்பைத்தரும்